Description
ஃபலஸ்தீனக் கவிஞரும் நாவலாசிரியருமான இப்றாஹீம் நஸ்ருல்லாஹ், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன வாழ்க்கையை அதன் அத்தனை வலிகளுடனும் குரூர நகைச்சுவையுடனும் இந்நாவலில் சித்தரித்துள்ளார். எழுதப்படாத கதைகளையும்கூட விழுங்கக் காத்திருக்கும் இஸ்ரேலியக் காட்டாட்சியின் கீழ் வாழும் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கண்ணியம் குலையாமல் எவ்வாறு தம்முடைய யதார்த்தத்தை மாற்றியமைக்க முயல்கிறார்கள் என்பதே கதைக்கரு. என்றுமே நிகழப்போகாத திருமணத்திற்காகத் தயாராகும் இரு சகோதரிகளின் அனுபவம் வழியே காஸாவின் முழு அனுபவத்தையும் நமக்களித்திருப்பதே இப்பிரதியின் வெற்றி.