சமூகம்சார் கொள்ளையர்கள்


Author: நரேஷ் வேல்சாமி

Pages: 136

Year: 2024

Price:
Sale priceRs. 180.00

Description

தமிழ்ப் பண்பாட்டில் சமூகக் கொள்ளையர்கள் பற்றிய எண்ணற்ற வெகுசன வழக்காறுகள், கதைப்பாடல்கள், வாய்மொழிக் கதைகள், சினிமாக்கள் இருந்தபோதிலும், இதுவரை சீரிய ஆய்வுநூல்கள் எவையும் வெளிவரவில்லை. இதற்கு முன் தமிழ்நாட்டுக் கொள்ளையர்கள் ஒருசிலர் பற்றி ஆ. சிவசுப்பிரமணியன், எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆகியோர் மட்டுமே சீரிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இந்நிலையில் தமிழில் கொள்ளையர்கள் பற்றி முதன்மையாக வெளிவரும் ஆய்வுநூல் முனைவர் நரேஷ்வேல்சாமியுடையது. கொள்ளை என்றாலே ஆளும் தரப்பின் கண்ணோட்டத்தில் இருந்து சரி-தவறு என்று கறுப்பு-வெள்ளையாகப் பார்க்கும் வழமையிலிருந்து விடுபட்டு, அதனை ஒரு சமூக நிகழ்வாக அணுகி ஆராய்வதே ஒரு சமூக ஆய்வாளரின் பணி. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் மான்ரின், தமிழ்நாட்டின் செம்புலிங்கம் ஆகிய இரு கொள்ளையர்களை ஒப்பிட்டு ஆராயும் முக்கியமான நூல் இது.

You may also like

Recently viewed