Description
1910 முதல் அல்லாமா இக்பால் எழுதிய குறிப்புகள் அடங்கிய இந்நூல் அரசியல், வரலாறு, இலக்கியம், ஆன்மிகம் முதலிய துறைகளில் அவரின் கூர்மையான அவதானங்களை முன்வைக்கின்றது. 33 வயதான இளம் இக்பாலை இக்குறிப்புகள் ஏககாலத்தில் ஒரு கிளர்ச்சியாளனின் கொந்தளிப்பும் சிந்தனையாளனின் நிதானமும் கொண்ட ஓர் ஒப்பற்ற அபூர்வ ஆளுமையாகக் காட்டுகின்றன. இக்பாலின் பன்முக ஆளுமை எத்தகைய சூழலில் உருவானது என்பதை இந்நூலுக்குக் கவிஞரின் மகன் டாக்டர் ஜாவித் இக்பால் எழுதியிருக்கும் பின்னுரை தெளிவாக விளக்குகிறது. இன்று நடைபெற்றுவரும் ஏகாதிபத்திய வல்லரசு வன்முறைகளுக்கு எதிரான சிந்தனை விதைகள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது இக்பாலின் காலத்திலிருந்த அரசியல், பண்பாட்டுச் சூழல்களின் இழை இன்றும் தொடர்ந்துவருவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் இந்நூல் இன்றைய காலக்கட்டத்திற்கும் அர்த்தகனம் உள்ளதாகிறது.