Description
ஏற்கனவே தான் எழுதிய விஞ்ஞானியின் மாமனார்' (தினமணி கதிர் நவம்பர் 2013), எக்ஸ் ஆக்ஸிஸ் 1990 (கல்கி -ஆகஸ்டு 2021) அறிவியல் சிறுகதைகளின் தொடர்ச்சியாகவே இந்த வரலாற்று அறிவியல் புதினத்தை எழுதியதாக நாவலாசிரியர் தாரமங்கலம் வளவன் கூறுகிறார். அவரது விஞ்ஞானியின் மாமனாரில் இப்படி ஒரு உரையாடல் வரும், குமரேசனின் வாகனம் அங்கு இறங்கியவுடன். அங்கு இருந்த பெண்களைப் பார்த்து நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கிறீங்க..கி.முவா, கி.பியா, என்று கேட்டான்.
இந்த நாவல் கி.மு மற்றும் கி.பி பயணத்தைப் பற்றித் தான். அறிவியலோடு வரலாறும் சொல்லப் பட்டு இருக்கிறது. புனைவின் வழி புத்தர் (கிமு ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு (கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில், உரையாடல் வழியாகவே காட்சிப்படுத்தப்படுத்தி இருக்கிறார். வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம்.