Description
முகத்திலறையும் சொற்கள்!
தமிழ்ச் சிறுகதைக்குப் புதிய வரவாக வந்துள்ளது இந்தத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘தொக்கம்’ என்கிற கதை, தமிழ்ச் சிறுகதைக்கான லட்சணம் எனலாம். சொல் முறையும் உடற்கட்டும் இந்தக் கதையை தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தருகின்றன. உக்கிரமான வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளின் மாந்தர்கள் எளியவர்கள். மாறாத யதார்த்துடன் அவர்களை சதிஷ் படைத்திருப்பது விசேஷமானது.