Description
நாணயங்களின் வரலாறு மிகத் தொன்மையானது. ஆரம்பத்தில் பண்டமாற்றுக்குப் பதிலாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் அவை வரலாற்றுச் சின்னங்களாகவும், அரசர்கள் மற்றும் தெய்வங்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முத்திரைகளாகவும் நிலைபெற்றன. அப்படி சிறப்புப் பெற்ற பண்டைய இந்திய நாணயங்களைப் பற்றிய சுவாரசியமான தொகுப்பு இந்தப் புத்தகம்.
பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களைப் பற்றி அறிவதற்குப் பல்வேறு இந்திய நூல்கள் நமக்கு உதவுகின்றன. பாணினியின் ‘அஷ்டத்யாயி’, கௌடில்யரின் ‘அர்த்தசாஸ்திரம்’ ஆகியவை நாணயங்களின் வகைகளைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றிலிருந்து பல்வேறு குறிப்புகளை எஸ்.கிருஷ்ணன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
பண்டைய நாணயங்களை அறிந்துகொள்ளும் போது, கூடவே நம் வரலாற்றுச் சிறப்பினையும் அந்தக் கால வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த நூலை முக்கியத்துவம் உள்ளதாக்குகிறது.