Description
‘பொன்னி வனத்துப் பூங்குயிலி’ எனும் வரலாற்று நாவல், நாயக்கர்கள் சிற்றரசர்களாக கயத்தாறு பகுதியில் ஆட்சி செய்த காலத்தில் நடைபெறுகிறது. உண்மையில் அக்காலத்தில் மக்கள் மனத்தை ஆட்சி செய்தது சாதியும் மதமும்தான் என்பதை இந்த நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
சாதி எவ்வாறு மனிதர்களை மாற்றுகிறது, உண்மையான அன்பையும் காதலையும் பாசத்தையும் கொண்ட மனிதர்களின் உணர்வுகள் எப்படிச் சாதியின் பெயரால் நசுக்கப்படுகின்றன, கெளரவம், மானம், தன்மானம் என்ற பொய்யான முகமூடிகளின் கீழ் சாதிவெறியின் முகம் எவ்வாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை பூங்குயிலியின் கதை நமக்கு உணர்த்துகிறது.
அக்காலத்து எளிமையான வாழ்வை அழகுறச் சொல்லிச் செல்லும் இந்த நாவல், அதே சமயத்தில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளிக்கிறது. வரலாற்று நாவல் வரிசையில் இதுவரை யாரும் தொட்டுச் செல்லாத பகுதியை இந்த நாவலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் கு.சடகோபன்.