பேகம்களின் கண்ணீர்


Author: க்வாஜா ஹஸன் நிஜாமி தமிழில் பென்னேசன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 360.00

Description

1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிகழ்விற்குப் பிறகு பகதூர்ஷா ஜாஃபரின் சந்ததியினர் எதிர்கொண்ட துயர வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ணீர் ததும்பக் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இந்நூலின் ஆசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி. மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் ஒதுங்க ஓலைக் குடிசை இன்றி வாழ்ந்ததையும், பட்டு மெத்தைகளில் படுத்து உறங்கியவர்கள் பழந் துணிக்கு அலைந்ததையும், எண்ணிக்கையற்ற மனிதர்களின் பசியைப் போக்கியவர்கள் போக்கிடம் இன்றி மசூதிகளில் பிச்சை எடுத்ததையும் விவரித்துச் செல்கின்றார் இந்நூலின் ஆசிரியர். இந்நூலைத் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய பணி செய்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் பென்னேசன். மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறித்து உலகம் முழுவதும் எத்தனையோ புத்தகங்கள் இதுவரை எழுதப்பட்டுள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் இந்நூல் பல்வேறு அம்சங்களில் விஞ்சி நிற்கிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க உண்மை மனிதர்களின் கண்ணீர்க் கதைகளால் ஆனது

You may also like

Recently viewed