Description
விஜய நகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வரலாற்றுத் தகவல்கள் மிகச் சிறப்பாகப் புனைவுத் தன்மையுடன் கையாளப்பட்டுள்ளன. இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் முழுமை பெறும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. தொடக்கம் முதல் இறுதி வரை இந்த நாவலில் வரும் சம்பவங்களும் விவரணைகளும் வாசகர்களைக் கட்டிப் போடும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழில் ஆழ்ந்த புலமையும், அசாத்தியமான கற்பனை வளமும், வரலாற்றுத் தகவல்களை நாவலில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும் கொண்ட ஆசிரியர் ஸ்ரீமதி, இந்த வரலாற்று நாவலைத் தேர்ந்த மொழிநடையில் எழுதி இருக்கிறார்.