Description
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள், நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். அங்குக் கடும் தண்டனைகளுக்கு உள்ளாகிப் பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானார்கள். வெகு சிலரின் பதிவுகள் மூலமே அந்தக் கொடுமைகள் வெளி உலகுக்குத் தெரியவந்தன. அந்தப் பதிவுகளில் முக்கியமானது உல்லாஸ்கர் தத்தாவின் பதிவு.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பரிந்திர குமார் கோஷுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உல்லாஸ்கர் தத்தா, சிறையில் கடும் பணிச் சுமையாலும் தண்டனைகளாலும் தீவிர மனச் சிதைவுக்கு உள்ளானார். சிகிச்சை என்ற பெயரில் அவர் மின்சாரத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். அந்தமான் சிறையிலும், பின்னர் மதராஸ் மனநலக் காப்பகத்திலும் தண்டனைக் காலத்தைக் கழித்த அவரது மனம், கற்பனைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடியது. தன் வாழ்க்கையின் இறுதிவரை அவர் இதே மனநிலையுடன்தான் இருந்தார்.
இந்தப் புத்தகத்தில் உல்லாஸ்கர் தத்தா தன் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே பதிவு செய்துள்ளார். உல்லாஸ்கர் தத்தாவின் உணர்ச்சிகளை அதே வீரியத்துடன் இந்தப் புத்தகத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன