Description
திருப்பூர் போன்ற ஒரு தொழில் நகரத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள வரலாறு சாதாரணமானதல்ல. பல முதலாளிகளின், ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் கூட்டு உழைப்பே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியா முழுவதிலிருந்தும் வந்து திருப்பூர் என்னும் தொழில் நகரத்தில் பணிபுரிகின்றனர்.
இங்கே தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்களாக உயர்ந்தவர்களும் உண்டு. பல முதலாளிகள் வீழ்ச்சி அடைந்து அடையாளமே தெரியாமல் காணாமல் போனதும் உண்டு.
• இந்த ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் என்ன காரணம்?
• இந்நகரத்தின் தொழில் சூழல் என்ன?
• தொழிலாளர்களும் முதலாளிகளும் எதிர்கொள்ளும் தினசரிச் சவால்கள் யாவை?
• ஒரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் இருக்கும் துரோகங்களும் சூழ்ச்சிகளும் என்னென்ன?
இவைபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இப்புத்தகத்தில் நீங்கள் கண்டடையலாம்.
சாதாரணத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தொழிலதிபராக முன்னேறியிருக்கும் ஜோதி கணேசன், தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெற்றவற்றை இந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.
எளிய சரளமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஓர் அத்தியாவசியக் கையேடாக அமையும் என்பதோடு, சாதாரண மனிதருக்கு ஈடு இணையற்ற சுயமுன்னேற்றப் புத்தகமாகவும் அமையும்