Description
தற்போதைய அரசியல் சூழலில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் திட்டிக்கொள்வதே அரசியல் விமர்சனம் என்றாகிவிட்டது. ஆனால், துக்ளக் சத்யா எழுதும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மாறுபட்டவை.
அரசியல் கட்சிகளை, அவற்றின் கொள்கைகளை, அரசியல் ஆளுமைகள் எடுக்கும் தவறான முடிவுகளைச் சிறிதும் கடுமை இல்லாமல் அங்கதமாக அதே சமயம் கூரிய விமர்சனமாக முன்வைப்பதில் சத்யா முதன்மையானவர். இவரது கட்டுரைகள் வாசகர்களுக்கு புன்னகையைத் தரும் அதே சமயம், நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைக் குறித்த தெளிவையும் உலக அரசியல் குறித்த பார்வையையும் அளிக்கின்றன.
‘எல்லாமே அரசியல்’ என்ற இவரது புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, துக்ளக் இதழில் 2022 வருடம் இவர் எழுதிய கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.