அத்யாத்ம ராமாயணம்


Author: லதா குப்பா

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 380.00

Description

ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ‘அத்யாத்ம ராமாயணம்’, ராம அவதாரத்தின் ஆன்மிகச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வடிவம் ஆகும். ராமனின் கதையை பரமசிவன் பார்வதிக்கு எடுத்துக் கூறும் வடிவில் இது அமைந்திருக்கிறது. ஸ்ரீராமர்மீது கொண்ட பக்தியின் மூலம் நாம் எவ்வாறு பிறந்த பயனை அடையக்கூடும் என்பதற்கான பாதையைக் காட்டுகிறது. அத்யாத்ம ராமாயணத்தின் நோக்கம் ராமனின் கதையைக் கூறுவது மட்டுமல்ல. வால்மீகியால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமர், ஒரு பரிபூரண மனிதனாக, தருமசீலனாக, புருஷோத்தமனாக இருக்கிறார். அத்யாத்ம ராமாயணத்தில் அவர், சர்வ வல்லமை படைத்தவராக, எங்கும் நிறைந்தவராக, எல்லாம் அறிந்தவராக, கீதையில் கூறப்பட்டுள்ளபடி தர்மத்தைப் பாதுகாக்கவும் தீமையை அழிக்கவும் அவதாரமெடுத்தவராக உருவகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த அற்புதக் காவியத்தின் சாராம்சத்தை அழகு தமிழில் இயற்றி வாசகர்களுக்குத் தந்துள்ளார் லதா குப்பா.

You may also like

Recently viewed