Description
மன்னர் காலத்து ஆட்சிமுறைகளில் அரசர்களின் ராஜதந்திரங்கள் சொல்லப்பட்ட அளவுக்கு அரசிகளின் ராஜதந்திரங்கள் சொல்லப்படவில்லை. மன்னர்கள் போர்முனையில் இருக்கும்போதும், அவர்கள் கொல்லப்பட்டு ராஜ்ஜியம் திகைத்து நிற்கும்போதும், மகாராணிகள் தங்கள் நாட்டைக் காக்கப் போரிடவும் தயாராக இருந்திருக்கிறார்கள்.
வீரபாண்டியன் ராஜ்ஜியத்தில் இல்லாத சமயத்தில், வீர பாண்டியனின் மனைவி செம்பியன் கிழாலடிகள் ராஜ்ஜியப் பரிபாலனத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். தன் மக்களையும் நாட்டையும் காப்பதற்காகப் பற்பல விவாதங்களில் ஈடுபட்டு, அமைச்சர்களுக்கும் சேனாதிபதிகளுக்கும் தக்க ஆலோசனைகளை வழங்கினார்.
செம்பியன் கிழாலடிகளின் மேன்மையையும் அறிவுத் திறத்தையும் ராஜதந்திரத்தையும் சிறப்பான எழுத்து நடையில் இப்புத்தகத்தில் எழுதி இருக்கிறார் சிரா. வீரபாண்டியனுக்காகக் காத்திருக்கும் செம்பியன் கிழாலடிகள் என்னும் வரலாற்றுப் பாத்திரத்தை உயிருடன் உலவவிட்டிருக்கிறார்.
சோழச் சூரியன் நூலின் மூன்றாம் பாகம் இது.