Description
நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில நேரம் மன உளைச்சலையும் சோர்வையும் தோல்விகளையும் தருகிறது.
• பணியிடத்தில் இத்தகைய சூழலை எதிர்கொள்வது எப்படி?
• வெற்றிகளால் தலைக்கனம் ஏறாமலும் தோல்விகளால் துவண்டுவிடாமலும் நடந்துகொள்வது எப்படி?
• சோதனைகளையும் சாதனைகளையும் இயல்பாகக் கடப்பது எப்படி?
• பணியிடத்தில் நாம் நிரந்தரச் சாதனையாளர் ஆவது எப்படி?
இவை போன்ற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதில் தருகிறது.
அலுவலக, தொழிற்சாலை நடைமுறைகள், முதலாளிகளின் மனோபாவம், சக பணியாளர்களுடன் பழகும் விதம், நேர்மையாகவும் திறமையாகவும் பணி செய்யும் திறன் என நம் அலுவலக வாழ்க்கையை மேம்படுத்தும் பல வழிகளை இப்புத்தகம் எளியமுறையில் எடுத்துச் சொல்கிறது.
நீங்கள் திறமையான பணியாளர் ஆவதற்கான ஸ்மார்ட் சாவி இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.