Description
சிறந்த முதலாளி ஆவதற்கான முதல் படி, முதலில் நாம் சிறந்த பணியாளராக இருக்கவேண்டும். ஒரு சிறந்த பணியாளருக்கு முதலாளி ஆவதற்கான கதவுகள் தானாகவே திறக்கும்.
ஒரு நிறுவனத்தின் தலைமைப்பதவி என்பது, பெருமைக்குரிய அதே சமயம் பெரும் பொறுப்புடன் கூடிய ஒரு பதவி. முதலாளி என்பவரை அந்த நிறுவனத்தில் பணி செய்யும் கடைநிலை ஊழியர் முதல் துணைத் தலைவர் பதவியிலிருப்பவர் வரை அனைவரும் ஒரே விதமாக மதிக்கவேண்டும். அதேபோல் முதலாளியும் அவர்கள் அனைவரையும் ஒரே விதத்தில் நடத்தவேண்டும். இதுபோன்று ஒரு சிறந்த முதலாளி ஆவதற்கான படிநிலைகளை இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துச் சொல்கிறது.
ஒரு முதலாளிக்கு இருக்கவேண்டிய குணாதிசயம், தலைமைத்துவம், பொறுமை, நடுநிலைமை, முன்யோசனை, தொழிலாளிகள் மேல் காட்டப்படவேண்டிய அக்கறை, கண்டிப்பு என அனைத்திற்கான வழிமுறைகளையும் செயல்முறைகளையும் ஆசிரியர் சரவணன் எடுத்துக்காட்டுகளோடு எளிமையான மொழியில் விளக்கியுள்ளார்.
பணியாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையேயான ஒரு பாலமாகச் செயல்பட்டு, ஒரு சிறந்த தொழிலாளி ஒரு தேர்ந்த முதலாளியாக உருவாவதற்கான கையேடாகவும் விளங்குகிறது இந்தப் புத்தகம்.

