Description
மகாபாரதம் என்றதும் பெரும்பாலோனோருக்கு நினைவுக்கு வருவது கண்ணன், அர்ஜுனன், துரியோதனன் போன்ற ஆண் கதாபாத்திரங்கள்தான். ஆனால் இந்த மாபெரும் இதிகாசம் நிகழ்த்தப்பட்டது பெண்களால்தான். பெண்களே மகாபாரதத்தை நடத்திச் செல்கின்றனர். அவர்களது ஆசைகள், கோபங்கள், விருப்பம், பொறாமை, வன்மம் ஆகியவையே மகாபாரத நிகழ்வுகளுக்கு அடிப்படை. இக்காவியத்தில் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.
இந்த மாபெரும் காவியத்தின் பெண் கதாபாத்திரங்களை மட்டும் தனியே எடுத்துப் பேசுகிறது இந்தப் புத்தகம். சத்யவதி, குந்தி, காந்தாரி, அம்பை, திரெளபதி, பானுமதி, இடும்பி, சர்மிஷ்டை என இக்காவியத்தில் பயணிக்கும் பெண்களையும், அவர்களது வெற்றிகள், தோல்விகள், துயரங்கள், வலிகள், துரோகங்கள், காதல் என அவர்கள் அனுபவித்த சோதனைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல்.