மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் - வரலாறும் வழிபாடும்


Author: ப . சரவணன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 190.00

Description

மதுரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று ‘மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்’. ஆன்மிக அன்பர்கள் அனைவருக்குமே வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்தக் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என்ற ஆவல் இருக்கும். இத்தகு பெருமை வாய்ந்த கோவிலின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறது இந்தப் புத்தகம். அருள்மிகு மீனாட்சி அம்மனின் ஆளுமை, ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் பெருமை, கோவிலில் வீற்றிருக்கும் உப தெய்வங்கள், கோவிலின் கட்டுமானம், சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் குறித்த தகவல்கள், கோவிலின் வரலாறு, முகலாய மன்னர்களால் இக்கோவிலுக்கு ஏற்பட்ட சோதனைகள், இக்கோவிலின் உருவாக்கத்திற்குப் பங்களித்த மன்னர்கள் குறித்த வரலாறு, அன்றாடம் நடக்கும் பூஜைகள் மற்றும் நியமங்கள், இக்கோவிலில் நிகழ்த்தப்படும் முக்கியத் திருவிழாக்கள் மற்றும் அதன் வரலாறு, திருவிளையாடல் நிகழ்வுகளின் கதைகள் என இக்கோவிலின் முழுமையான வரைபடத்தை நம் கண்முன் காட்சியாக விரிக்கிறது இந்தப் புத்தகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றவர்களுக்கும் செல்ல இருப்போருக்கும் ஓர் அற்புதப் பொக்கிஷமாகவும் அத்தியாவசியக் கையேடாகவும் இப்புத்தகம் விளங்கும்.

You may also like

Recently viewed