கொஞ்சம் பொருளாதாரம்


Author: சோம வள்ளியப்பன்

Pages: 120

Year: 2024

Price:
Sale priceRs. 130.00

Description

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன், ‘இந்தியாவில் இதுபோன்ற வசதிகளை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?’ என்று கேட்டவர்கள்கூட, வியக்கும் அளவுக்கு இந்தியா இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது என்பதை நிபுணத்துவத்துடன் கூடிய கட்டுரைகளின்வழி விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன்.
நாட்டின் பொருளாதாரம் என்பது ஏதோ வானத்திலிருந்து விழும் அதிசயம் அல்ல; மனித வளத்தின் பேராற்றலால் நிகழும் அற்புதம் என்பதை ஒவ்வொரு கட்டுரைகளின் சாரமும் விளக்குகின்றன.
தனிமனிதனின் உழைப்பும், அவன் ஈட்டும் வருமானமும் நாட்டின் பொருளாதாரத்துக்கு எப்படி ஆதாரமாக மாறுகின்றது, இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போது எத்தகைய விளைவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது என்பதை விரிவாக இந்தப் புத்கத்தில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

You may also like

Recently viewed