நக்கீரன் இயர்புக் 2025


Author: எஸ்.செல்வராஜ்

Pages: 1120

Year: 2025

Price:
Sale priceRs. 300.00

Description

சிகரத்தைத் தொடும் 19-ஆம் பதிப்பு 'நக்கீரன்' வாரமிருமுறையிதழ் ஒவ்வொன்றும் ஆவணம்தான் என்பது வாசகர்களின் தீர்ப்பு சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளியிடப்படும் நக்கீரன் செய்திகள், வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர். பத்திரிகைத் துறையில் மட்டுமின்றி. பதிப்புத்துறையிலும் 'நக்கீரன்' குழுமம் அழுத்தமான தடம் பதித்து வருகிறது. பொதுவுடைமை சித்தாந்தத்தை எளிதில் புரியவைக்கும் 'கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை', பெருங்கடல் போன்ற இந்து மதத் தத்துவங்களை சிறு கிண்ணத்தில் சுவையான பழச்சாறுபோல தந்த 'இந்து மதம் எங்கே போகிறது?, 'போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு நூல்கள், வரலாற்று நாயகர்களின் நூல்கள், மாணவர்களுக்கான, 'ஐ.ஏ.எஸ். யாருமாகலாம்' போன்ற விற்பனையிலும் சாதனை படைத்த நூல்களை 'நக்கீரன்' தந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் இயர்புக் வெளியிட்டு வருகிறோம். இயர்புக் இலக்கணப்படி அதில் இடம்பெறவேண்டிய அனைத்துத் துறை தகவல்களும் 'நக்கீரன்' இயர்புக்கிலும் இடம் பெற்றுள்ளன. அத்துடன், 'நக்கீர னுக்கேயுரிய தனி பாணியாக, 2024-ஆம் ஆண்டு நிகழ்வுகள், அனைத்து போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் தயார் செய்யும் விதத்தில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள், முக்கிய கட்டுரைகள் என எந்தவொரு நிகழ்வையும் தவிர்க்காமல் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தந்துள்ளோம். இந்த இயர்புக்கிலுள்ள தகவல்கள் எந்தக் காலத்திலும் வாசகர்களுக்குப் பயன்தரும் விதத்தில் தொகுக்கப்பட்டிருப்பதுடன், அதனை நீண்டகாலம் பாதுகாப்பாக வைத்திருக்கும் விதத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்காக அக்மார்க் தமிழ் பதிப்பகம் ஒன்று வழங்கும் 'இயர்புக்' இது பதினெட்டு வருடங்களாக நாம் வெளியிடும் இயர்புக் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், 'நக்கீரன்' பதிப்பகத்திற்கு இது பத்தொன்பதாவது பதிப்பு. இந்த முயற்சிக்கு வாசகர்களின் வரவேற்பு பலமாக அமையும் என நம்புகிறோம். வாசக அன்பர்கள் இந்த 'இயர்புக் பற்றி ஏதேனும் கருத்துகள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். இயர்புக் 19-ஆம் பதிப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் பாடுபட்ட அன்புத் தம்பி செல்வராஜ் அவருக்கு பெரும் உதவியாக இருந்த தம்பி கேசவன் மற்றும் துரை, கணேசன், சரவணப்பெருமாள், மைக்கேல் ஸ்டாலின், இவர்களுக்கு எனது பாராட்டுகள். இயர்புக் எனும் பெரும்பதிப்பை தமிழக வாசகர்களுக்குப் பெருமையுடன் வழங்குகிறது 'நக்கீரன்'. அன்புடன், நக்கீரன் கோபால்

You may also like

Recently viewed