Description
சிறார்களுக்கு எழுதுவதும் பதிப்பிக்கப்படுவதும் இப்போது கவனம் பெற்று வருகிறது. இந்த நூலில், மகாகவி பாரதி தொடங்கி, மாணவி சிந்துஜா (8-ஆம் வகுப்பு) அண்மையில் எழுதிய கதைகள் வரை தொகுக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதிய படைப்புகள், குழந்தைகளுக்கான படைப்புகள் என சிறார் இலக்கியம் மூன்று வகைப்பாட்டில் அமைகின்றது. இந்தத் தொகுப்பிலுள்ள 100 கதைகளில் _x0003_60 கதைகள் சிறார்களுக்கானவை. 40 கதைகள் சிறார்களைப் பற்றியவை. எல்லாக் கதைகளுமே சிறுவர்கள் வாசித்து மகிழக் கூடியவை. கதைப்போக்கில் மானுடப் பண்புகளை நிலை நிறுத்துபவை. தமிழ் சிறார் இலக்கியத்தின் தரத்தை எடுத்துக் காட்டுபவை. சிறுவர்கள் வாசிப்பதற்கான கதைக் களஞ்சியமாகவும் ஆய்வுக்கான ஆவணமாகவும் இந்தத் தொகுப்பு விளங்கும் என்று சொன்னால் மிகையல்ல.