Description
மிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை. எழுத்தும் இல்லை என்ற சங்க மரபைச் சேர்ந்தவை அவரது கதைகள் என்றாலும் நவீன கதைக்கான நுட்பங்களையும் உட்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அழிந்துவரும் கிராம வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டவும் எடுத்துச்சொல்லவும் உதவும் பண்பாட்டு ஆவணங்களே என். ஸ்ரீராமின் கதைகள்.
தற்போது இரவோடி என்கிற தனித்துவமான நாவலை படைத்திருக்கும் என். ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
- எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்

