Description
ஏ.நஸ்புள்ளாஹ் தன் கவிதைப் புலத்தில் எழுதப்படாத புதிய சம்பவங்களையும் உரையாடல்களையும் தன்னுடைய சுய அனுபவமாக கவிதையில் இதுவரை புழங்கா மாயமொழிகளாக வாசகனுக்குத் தருகிறார். அவரது கவிதைகள் புதிய கிளர்ச்சியின் பாதையில் வாசகனைத் தொடர்ந்து பயணப்பட வைப்பதுடன் மாற்று அனுபவத்தை வாசக மொழிப் பரப்புக்குள் பதியமிட முயல்கின்றன.