Description
ஷாராஜின் சிறுவர் கதைத் தொகுப்புகளில் இது நான்காவது.
சிறார்களுக்கு பொதுவான சிறார் கதைகளை எழுதுவதை விட, உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து, மறு ஆக்கம் செய்து வழங்க வேண்டும் என்பதே இவரது முக்கிய நோக்கம். அவ்வாறே தனது தொகுப்புகளில் கூடுமானவரை உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேர்த்து வருகிறார். ’மாண்புமிகு அரண்மனைப் பூனை’ என்னும் இத்தொகுப்பில் முழுக்க முழுக்க உலக நாட்டுப்புற சிறுவர் கதைகள் மட்டுமே உள்ளன.
இக்கதைகள் சிறார்கள் மட்டுமன்றி பெரியவர்களும் வாசித்து ரசிக்கத் தக்கவை. அனைத்து கதைகளுக்கும் ப்ரத்யேகமாக வரையப்பட்ட, படைப்புத்தன்மை கொண்ட ஓவியங்களும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.