Description
இசை நாடக வடிவில் அமைந்த இராமச்சந்திர கவிராயரின் ‘ஸ்ரீ மகாபாரத விலாசம்- சூது துகிலுரிதல்’ நூலின் ஆராய்ச்சிப் பதிப்பாக சிவ. விவேகானந்தனால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் மகாபாரதத்தில் தருமர் சூதாடியது முதல் வனவாசம் சென்றது வரையிலான நிகழ்வு கள் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சூதாட்டம் பற்றி பழந்தமிழ் இலக்கி யங்களில் காணப்படும் குறிப்புகளை ஓரிடத்தில் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர். சம காலத் தில் உலகம் முழுவதும் சூதாட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப் பிடப்பட்டுள்ளது.