Description
ஆரோக்கியத்துக்கு உறுதி அளிக்கும் சிறு தானிய வகைகளை பண்டைய நாட்களில் இருந்தே சமையலில் அதிக அளவில் உபயோகித்தது கொங்கு நாடு மட்டும்தான். சிறுதானியச் சமையலுக்கு என்று நீங்கள் தனியாகப் புத்தகம் வாங்கவேண்டியதே இல்லை. அத்தனை சிறு தானிய சமையல் வகைகள் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும், முளை கட்டிய பயறு வகைகளை உபயோகித்துச் செய்யும் சமையல் வகைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. கொங்கு நாட்டுச் சமையலில் முதல் முக்கியத்துவம் உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நூலை வாசித்தால் நீங்கள் உணர்வீர்கள்.