நல்ல உணவு நலமான வாழ்வு

Save 4%

Author: டாக்டர்.எஸ்.அமுதகுமார்

Pages: 232

Year: 2025

Price:
Sale priceRs. 240.00 Regular priceRs. 250.00

Description

உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே என்பது திருமந்திரத்தில் திருமூலர் வாக்கு. இதை அடியொட்டி, உச்சந்தலை முதல் பாதம் வரை ஆரோக்கியத்துக்கான உணவின் அவசியத்தை மிகவும் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் இந்த நூலின் 30 கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் அமுதகுமார். முழு உடல் பரிசோதனை செய்வதன் அவசியம், பாக்டீரியா கிருமி, ரத்தக் கொதிப்பு, மீன்களில் பாதரசக் கழிவு போன்ற கட்டுரைகளில் நூலாசிரியரின் துறைசார்ந்த அனுபவம், படிப்பவர்களின் வாசிப்பனுபவமாக மாறும். நல்ல உணவில் இருக்கும் சத்துக்கள், அதை கிரகிக்கும் உடலின் பாகங்களைப் பற்றிய குறிப்புகள், சத்து சேகரமாகும் விதம், கழிவாக வெளியேறும் விதம் என, நம் உடலுக்குள் நாமே சுற்றுலாப்பயணம் சென்றுவந்த உணர்வை இந்தப் புத்தகம் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்! “தினமும் ஒரு டீஸ்பூன் அதாவது, சுமார் பத்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்து அதிகமாகும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆரோக்கியத்துக்கான உணவின் அவசியத்தை மிகவும் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் இந்த நூலின் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் அமுதகுமார்.

You may also like

Recently viewed