தூங்காத இரவுகள்

Save 5%

Author: மருத்துவர் துரை. நீலகண்டன்

Pages: 160

Year: 2024

Price:
Sale priceRs. 180.00 Regular priceRs. 190.00

Description

மருத்துவராக மட்டுமின்றி, ஒரு தந்தையாக, சகோதரனாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுரைகளையும் விழிப்புணர்வையும்\ அக்கறையோடும் அன்போடும் இந்த நூலில் வழங்கியிருக்கிறார் மருத்துவர் துரை நீலகண்டன். இயல்பாகவே எழுத்தில் ஒரு உரையாடல் தொனி இருக்கிறது. அது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. வளமான மொழியும் வாய்த்திருக்கிறது மருத்துவருக்கு! - வெ. நீலகண்டன், துணை நிர்வாக ஆசிரியர், ஆனந்த விகடன் எளிய மொழியில் உலக மருத்துவ ஆய்வுகள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தேவையற்ற பயங்கள், நவீன மருத்துவமும் இன்றைய சமூகமும் என மருத்துவ உலகின் உண்மைகளை உரைத்து, நல்ல வழிகாட்டியாக மருத்துவர்கள் மாற வேண்டிய சூழலே சமூகத்தின் இன்றைய தேவை என நேர்மையாக எடுத்துரைக்கும்போது நம் மனதில் மாண்புமிகு மருத்துவராக நம்பிக்கையோடு உயர்ந்து நிற்கிறார் மருத்துவர் துரை. நீலகண்டன். 'தூங்காத இரவுகள்' என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மைகள், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகள், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். எனவே இல்லங்களில் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய வாழ்வியல் வழிகாட்டி. - முனைவர். இரா. அகிலன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

You may also like

Recently viewed