Description
நம் தமிழ்மொழி என்பது ஒரு ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம் ஆகும். அது நம் உணர்வோடும் உயிரோடும் கலந்த ஒன்றாகும். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகளின் உயிர்நாடி தமிழே எனில் மிகையில்லை. தமிழ்மொழி பன்னூறு ஆண்டுகாலம் நிலை பெற்றிருக்கிறதென்றால் அதன் மொழி வளமையும் இளமையும் எழிலுமே காரணமாகும்.