Description
காட்டிற்கு உயிர் இருக்கிறது. அவ்வுயிரின் வேரிலிருந்து விளைந்த கதை இது. பளிச்சி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை.
காட்டின் விதிகளை மனிதன் மீறும்போது அவள் தனக்கானதைத் திரும்ப எடுத்துக்கொள்வாள்.
மனிதனின் உளவியலில் வேரூன்றி இருக்கும் வேட்டையுணர்வின் நீட்சி இந்தப் புதினம். சாகச உணர்வையும் வெற்றிக்களிப்பையும் தாண்டி வேட்டையின் உளவியலுக்குள் ஒளிந்திருக்கும் ஆதிக்க உணர்வு, குரூரம், பாலியல் வேட்கை போன்ற உணர்வெழுச்சிகளுக்கு ஆளாகும் மனிதர்கள் சக மனிதர்களை வேட்டையாடுவதும் அவர்களால் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
‘கானகன்’ லஷ்மி சரவணகுமாரின் எழுத்தில் மீண்டும் ஒருமுறை காடு தன் கதையைச் சொல்கிறது...

