Description
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் * நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள *வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில் *எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று நூலாசிரியர் சான்றுகளுடன் நிறுவுகிறார்.. இந்தச் செறிவான கட்டுரை முந்தைய பதிப்பில் இல்லை. இம் மீள் பதிப்பில் புதிதாக இடம் பெற்று உள்ளது. இதனுள் “தமிழின் தலைவர்” தொல்காப்பியரே -- “சநாதனத்தின் தலைவர்” அகத்தியரே” என்ற ஆய்வுக் கட்டுரை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

