Description
ஒரே நாடு - ஒரே வரி ஒரே தேர்தல் என ஆரியத்துவ வெறியுடன் ஒற்றையாதிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில், தேசிய இனங்களின் உரிமைக் குரல்கள் மேலோங்கி வரும் காலமிது!
இவ்வாறான சூழலில், "இந்தியாவை முழுக் கூட்டரசாக்குக!" என்ற முழக்கத்தோடு, இந்தியக் கூட்டரசு எப்படி இருக்க வேண்டும். அதன் கூறுகள் என்னென்ன என்று விவாதித்து விளக்கும் வகையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 10.05. 2025 அன்று தஞ்சை காவிரி திருமண அரங்கத் திடலில் "கூட்டரசுக் கோட்பாடு" சிறப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டின் தீர்மானங்கள், உரைகள், பாவரங்கக் கவிதைகள் ஆகியவை தொகுக்கப்பட்டு, நூல் வடிவம் பெற்றுள்ளது மகிழ்வைத் தருகிறது.
-பன்மைவெளி