Description
திருமால் உறையும் திருத்தலங்களை தரிசிக்கும் பேறு பலருக்கு கிட்டியிருந்தாலும், அவற்றில் திவ்ய தேசங்கள் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திருத்தலங்களை தரிசிப்பதை மகத்தான பேறாக பக்தர்கள் கருதுவதுண்டு. ஒவ்வொரு கட்டுரையிலும், அந்தந்த தலத்தின் வரலாறு, சிறப்பு அம்சம், திருவிழாக்கள் போன்ற தகவல்கள் தெளிவுற குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்நூல் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது திண்ணம்.