Description
காதலர்கள்
பார்
அவர்கள் எவ்வாறு
ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென
அவர்கள் நாடி நரம்பு எங்கிலும்
உயிர் துளிர்க்கிறது
அவர்களின் உடல்கள்
இருவேறு
அச்சுகளென நடுநடுங்கி
வெப்பமும் வேட்கையும்கொண்டு
ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன
தாகம் கொண்டால்
அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும்
காத்திருந்தால்
ஒருவரையொருவர் காணமுடியும்
உயிர் பிழைத்திருப்பதற்கு
ஒருவருக்குள் மற்றவர் மூழ்கட்டும்
மூழ்க விடு.
- ரைனர் மரியா ரில்க்க