Description
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து ஐ.நா.வும்- பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும்; ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் (Utah State, Houston) வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.