Description
இந்தப் புத்தகம், ஒற்றர்களின் ரகசிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. வரலாற்றின் புதைக்கப்பட்ட பக்கங்கள் மட்டுமே அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் உழைத்ததெல்லாம் அமைதியான ஓர் உலகை நமக்கு அளிப்பதற்காக. அதற்கான சன்மானம் அவர்களது கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
அவர்களுடைய இரட்டை உலகின் இன்னொரு பகுதியைப் போலி அடையாளங்கள், ரகசியக் குறியீடுகள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பதற்றத்துடனேயேக் கழித்திருக்கிறார்கள். போர்களைத் தடுத்தும் அரசியல் போக்கை மாற்றியும் உயிர்காக்கும் சாதனைகளைச் செய்திருந்தாலும் கைம்மாறாகக் கிடைத்ததெல்லாம் கடமையைச் செய்த நிம்மதி ஒன்றே.
நம்மால் ஒற்றர்களைக் கண்டுகொள்ளவோ, கேள்விப்பட்டிருக்கவோ முடியாது போயிருக்கலாம். ஆனால் அவர்களால் கிடைத்த நற்பலன்களை நிச்சயம் அனுபவித்திருப்போம். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னரே தங்கள் சாமர்த்தியத்தால், ஒற்றர்கள் உருவாக்கி வாழ்ந்திருந்த மாய உலகுக்குள் நுழைந்து பார்ப்போம் வாருங்கள்.