Description
உலகம் முழுக்க பெண்ணியலாளர்கள் வலியுறுத்துவது Personal is Political. ஆனால், அப்படி 'அந்தரங்கத்தை அரசியலாக்குதல்', ஒளிவுமறைவின்றி தன்வரலாறு எழுதுதல் இன்றுவரை தமிழ்ப் பெண்களுக்கு வாய்க்கவில்லை. எனினும், தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நூல்களை இங்கு பெண்கள் எழுதி வந்துள்ளனர். இந்நூலும் அதே வகைமையே. இது எழுத்தாளரின் வாழ்க்கையினூடாகப் புனையப்பட்ட சிறு பின்னல் மட்டுமே. 'Whistle blower' என்று ஜூலியன் அசாஞ்சைக் கொண்டாடும் உலகம் இது. ஆனால், ஒரு விசில் புளோயராக, 'மெகா' ஊழல் ஒன்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த, தமிழ்நாட்டின் மூலையில் பணியாற்றிய பெண் ஒருவரை அதிகார மையம் எப்படி வாழ்க்கையின் ஓரத்துக்கே நெட்டித் தள்ளியது என்பதை விசிலின் 'இவள்' பேசுகிறாள். இன்றளவும் தொடரும் ஊழலை, அதை முறியடிக்க முடியாத கையறுநிலையை இந்த நூல் பேசுகிறது, கூடவே. இவள் மீட்டெடுத்த இவளின் வாழ்க்கையையும்.

