பதற்றம் - காரணிகளும் தீர்வுகளும்


Author: பிரின்ஸ் கென்னட்

Pages: 224

Year: 2025

Price:
Sale priceRs. 275.00

Description

  • பதற்றம் என்றால் என்ன? இந்த உணர்வு எப்படி உருவாகி, நமது செயல் செயல்பாடுகளில் எவ்வாறு வெளிப்படுகிறது?
  • பதற்றத்தை உடலளவில் எவ்வாறு உணர்கிறோம்?
  • பதற்றத்திற்கான காரணங்கள்
  • பதற்றம், மனஅழுத்தம், கவலை, அச்சம் இவற்றிற்கிடையே உள்ளத் தொடர்பு
  • பதற்றமும் பரிணாம வளர்ச்சியும். பதற்றத்தில் நரம்பு மண்டலத்தின் பங்கு
  • பதற்றம் குறித்த தவறான நம்பிக்கைகள்
  • பதற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் - அவைகளைத் திறம்பட கையாளும் வழிகள்
  • பதற்றத்தை சமாளிக்க எளிய உடற் பயிற்சிகள் - செயல் முறை விளக்கங்கள் (இப்புத்தகத்தின் ஒரு சிறப்பு அம்சம்)

பிரின்ஸ் கென்னட் தனது பயணத்தை ஒரு இயந்திரவியல் பொறியாளராகத் தொடங்கினார். பின்னர் உளவியல், உளவியல் ஆலோசனை மற்றும் மேம்பாட்டு உளவியலில் சிறப்பு மேற்படிப்புகளைப் பயின்று, தற்போது ஒரு உளவியலாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழ் மொழி, மக்கள் மற்றும் மண் மீது ஆழமான பற்றுடைய சமூகச் செயற்பாட்டாளரான இவர், மெல்போர்னின் மேற்கு பகுதியில் தமிழ்ப் பள்ளிகளை நிறுவும் பணியில் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ‘ஆஸ்திரேலிய தமிழர்கள்’, ‘விக்டோரியா தமிழ்க் கூட்டமைப்பு’ போன்ற சமூக அமைப்புகளை உருவாக்கி, ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்திற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்.

இவரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், தமிழ்நாட்டில் விவசாய மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, கல்வி உதவி போன்ற பல்வேறு பொதுநலச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஆஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறை தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதில் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.

சமூகத் தலைமைத்துவத்துக்கு அப்பால், மனநலத் துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் ஆங்கில புத்தகமான “Easy Way to Control Alcohol”-ஐ தமிழாக்கம் செய்தார். இதை தொடர்ந்து “பதற்றம் - காரணிகளும் தீர்வுகளும்” என்ற நூலை வெளியிட்டு, பதற்றத்தை புரிந்துக் கொள்ளவும், அதை திரும்பட சமாளிக்கவும் நடைமுறை உத்திகளை வழங்கியுள்ளார்.


You may also like

Recently viewed