Description
100 அசைவ சமையல் குறிப்புகள்!அசைவ சமையலின் மகுடம் என்றால் அது சிக்கன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம்பிடிப்பதும் சிக்கன் உணவுதான். காரணம் சிக்கனின் மென்மையான சுவை மட்டுமல்லாமல் சிக்கனை அறுசுவை தினுசிலும் விதவிதமாகச் சமைக்கமுடியும் என்பதுதான். எந்தவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சுவை கூடுமே தவிர அலுக்கவே அலுக்காது. தவிர சிக்கனை சாப்பிட்டால் கொழுப்பு சேருமோ என்று பயப்படவே தேவையில்லை. புரதச்சத்து நிறைந்த, உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் சிக்கன் சமையலில்தான் எத்தனையெத்தனை வகைகள். ருசியைக் கொண்டாடும் சிக்கன் ரசிகர்களுக்காகவே உள்ளே அணிவகுக்கின்றன வெரைட்டியான சிக்கன் டிஷ்கள். சிக்கன் சமையலின் சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சிக்கன் சமையல் குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில். இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிக்கன் சமையலின் நளமகராஜா/நளமகாராணி நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.