Description
100 மட்டன் சமையல் குறிப்புகள்!அசைவ சமையலின் ‘ராஜா’ என்றால் அது மட்டன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம் பிடிப்பதும் மட்டன் உணவுதான். காரணம் அசைவத்தின் ருசியிலும் முதல்தரம் ஆட்டு இறைச்சிதான். இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மட்டன் ரசிகர்கள்தான். மட்டன் சமையலின் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் ஆட்டு இறைச்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனை அளிக்கிறது. அனைவருக்கும் பிடித்தமானதும், மிக விருப்பமாகச் சமைப்பதிலும் முன்னணியில் இருக்கும் ஆட்டு இறைச்சியை எந்தவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சுவை கூடுமே தவிர அலுக்கவே அலுக்காது. உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் மட்டன் சமையலில்தான் எத்தனையெத்தனை வகைகள். ருசியைக் கொண்டாடும் மட்டன் ரசிகர்களுக்காகவே உள்ளே அணிவகுக்கின்றன வெரைட்டியான மட்டன் டிஷ்கள். மட்டன் சமையலின் சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், கிரேவிக்கள், வதக்கல், வறுவல், பொரியல், டிபன் வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான மட்டன் சமையல் குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில். இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் மட்டன் சமையலின் நளமகராஜா/நளமகாராணி நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.