Description
இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன.புதிய திழில் நுட்பம் கண்ணுக்கு தெரியும் பல நன்மைகளைச் செய்யும் அதே நேரத்தில்,கண்ணுக்கு சட்டென்று புலப்படாத தளத்தில் உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும் இவர் கதைகள் நுட்பமாக சித்தரிக்கின்றன.படிப்பு,பதவி போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின,சாதிப் பாகுப்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம் எழுப்புகிறார்.