Description
வரலாறு ஒரு மகாநதி: காலமெனும் வெள்ளத்தின் சுழித்தோடும் சாட்சி. நதியின் கரைகளில் சிலர் பார்வையாளர்களாய், காலத்தின் போக்கை வியந்து நிற்கிறார்கள். வெகுசிலர் அந்த நதியில் கரையோரங்களில் நின்று கால்களை மட்டும் நனைத்துவிட்டுக் கரையேறுகிறார்கள். ஆனால். வரலாற்றினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அந்த நீரோட்டத்தில் இறங்கி, துணிச்சலுடன் எதிர்நீச்சல் போடுகிறார்; நதியின் போக்கையே திசைமாற்றும் தலைவராகவும் உருவெடுக்கிறார். அப்படியான தலைவர் இன்று, தமிழினம் தழைப்பதற்காக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தி வருகிறார்.
அந்தத் தலைவரின் பாசறையில் அரசியல் பாடம் பயிலும் ஒரு படைவீரன், படிப்படியாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டு, தன் கையால் உருவாக்கிய ஒரு படைக்கலக் கருவியாக வெளியாகிறது திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய, 'தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை' என்கிற இந்த நூல்.