Description
தமிழ்ச்சமூகத்தின் உயிராக இருந்த பெரும்பான்மை மக்களே மொழி, கலாச்சாரத்தைக் காத்து வந்தவர்கள். ஏனெனில் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டித் தமிழ் மக்களை ஆதிக்கம் செய்து வந்த நிலப்பிரபுத்துவ அரசர்களும் அவர்களது பரிவாரங்களும்தான் வட இந்திய நிலப்பிரபுத்துவக் கும்பலுடனும் மத குருக்களுடனும் இணைந்துகொண்டு சமஸ்கிருத மொழியை, மதக் கலாச்சாரத்தையும் பயன்படுத்தி வந்தன.
தங்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத் தமிழ் பேசும் மக்கள் போராடி வந்துள்ளனர். தமிழ் நிலப்பிரபுத்துவ அரசுகள் சிதைந்து நிலைகுலைந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுமையும் அடிமைப்படுத்தியதுபோல தமிழகத்தையும் அடிமைப்படுத்தினார்கள். தமிழ் மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினாலும் தமிழ் நிலப்பிரபுகளும், தரகு வியாபாரிகளும் தரகு முதலாளிகளும் ஆங்கிலேயர்களோடு கூடிக் குலாவிக்கொண்டுதான் இருந்தனர்.
தமிழ் மக்களைச் சுரண்டுவதற்காக அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நின்றனர். சர், திவான், பகதூர் போன்ற பட்டங்களைப் பெற்றுக்கொண்டு ஆங்கில மொழிக் கலாச்சாரத்தில் திளைத்தனர். இவர்கள் தலைமையில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி என வழங்கிக்கொண்டு பிரிட்டிஷாரிடம் சலுகைகள் கோரி, தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நின்றனர்.
தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தமிழரசன்