Description
சங்க இலக்கியத்தில் நான் என்னைத் தொலைத்து அதனோடு இரண்டறக் கலந்து, சங்ககாலத்திற்கும் சமகாலத்திற்குமிடையே கால ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடியவாறு, பார்த்துப் பார்த்து எழுதிக் கோர்த்த கதைகள் இவை. இப்புத்தகத்தில் உள்ள இருபது கதைகளும் ஒன்றைப் போல் ஒன்றில்லாமல், வெவ்வேறு களங்களில் எழுதப்பட்டவையாகும். என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகமாக இதைக் கருதுகிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் சங்க இலக்கியத்தின் சுவையை அறிந்திட வேண்டுமென்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும்.
* வித்யா சுப்ரமணியம்