Description
"இராஜேந்திர சோழனுக்கு நண்பனாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி ஒருவனே மித்ரன்,
மாமன்னர் இராஜேந்திர சோழன் கங்கை படையெடுப்பு செய்தார், கடாரம் மற்றும் ஸ்ரீ விஜயத்தை வென்றார். அத்துடன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புது தலைநகரை உருவாக்கினார். இந்த வரலாற்றுச் செய்திகளை வைத்து, கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்தையும் கோத்து, அவற்றை மித்ரனின் பயண வழியாக்கி, இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் சிரா.
இராஜேந்திர சோழனைப் பற்றிப் பேசிய நூல்களில் மித்ரன் நாவலுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதன் கதைக்களம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதே அதன் காரணம். மித்ரன் உங்களை வசீகரிப்பான்."

