Description
சுகா உதவி எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். வசனகர்த்தா. இயக்குநர் பாலுமகேந்திராவிடம் இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தவர். ஆனந்தவிகடனில் வெளிவந்த 'மூங்கில் மூச்சு' தொடர் மூலம் தமிழ்நாடெங்கும் பரவலாக அறிமுகமானவர் 'தூங்காவனம்' திரைப்படத்தின் வசனகர்த்தாம் 'பாபநாசம்' படத்துக்கு நெல்லை வட்டார வழக்கு ரீதியிலான வசனங்களில் பெரிய அளவில் பங்காற்றியவர் 'அகரன்' படத்துக்கு வசனம் இவரே. அதுபோக, இத்திரைப்படஉருவாக்கத்திலும் இவரது பங்கு முக்கியமானது.
'தாயார் சன்னிதி', 'உபசாரம்' 'வேணுவனலாசம்', 'திருநெல்விருந்து' வடக்குரதவீதி', 'சாமானியனின் முகம்" போன்றவை இவர் எழுதிய பிற நூல்கள். மனையி மற்றும் மகனுடன் சென்னையில் வசிக்கிறார்.
மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள், தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு. அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஒலியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா?
வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக கோயில் பிரகாரத்தின் கற்பாளங்களில் ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகயால் முடித்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி.
- வண்ணதாசன்