Description
சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை.மகிழ்ச்சியில் அவர்கள் முகம் எப்போதும் குதூகலிக்கிறது. வாழ்க்கை உருவாக்கம் தடைக்கற்களை எளிதாகப் புரட்டிப் போட்டு விட்டு, அடுத்த பிரச்னை நோக்கி சிரித்த முகத்தோடு புறப்படுகிறார்கள். அவர்களை யாரையும் தவிர்ப்பதில்லை. எது முக்கியம் (எது முக்கியமில்லை) என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது.இவற்றை எல்லாம் அவர்கள் எப்படிக் கற்றுக்கொண்டார்கள்? பிறக்கும் போதே அவர்களுக்கு எல்லாம் தெரியுமா? முயற்சி செய்தால் நாமும் அதைக் கற்றுக் கொள்ள முடியுமா?இந்தக் கேள்விகளுக்கான அழுத்தம் திருத்தமான பதில், முடியும் என்பதுதான். வாழ்க்கையின் விதிகளை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.நமக்கு வழி காட்டும் மிகச் சிறந்த கொள்கைகள்தான் வாழ்க்கையின் விதிகள். வாழ்க்கை என்னும் அட்சய பாத்திரத்திலிருந்து இன்னும் அதிகமான விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள, வெறுப்புகளை சுலபமாக விட்டொழிக்க, சந்தோஷமான, அமைதி மிகுந்த, மனநிறைவான வாழ்க்கையைப் பெற இந்த விதிகள் நிச்சயம் உதவும். இந்த விதிகள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமும் நிறைய நன்மையை உருவாக்குவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.இது உங்கள் வாழ்க்கை. இதை மகிழ்ச்சியானதாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு இல்லையா?