Description
வாழ்க்கையில் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கும் வெற்றியாளராக நீங்கள் மாற வேண்டுமா? அரசியல், மக்கள் பிரச்னைகள் என்று பலவற்றிலும் நீங்கள் ஈடுபட்டு, வெற்றிகளைக் குவிக்க வேண்டுமா? அடைய முடியாத இலக்குகளையும், அளவுக்கதிகமான வேலையையும் நீங்கள் சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்க வேண்டுமா?சரியான காரியங்களை செய்யாமல் தப்பும் தவறுமாக ஏதேதோ செய்து விட்டு வருத்தப்பட்டு நிற்கிறீர்களா? ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் துளிகூட வியர்வை சிந்தாமல், கொஞ்சமும் கடினமாக உழைக்காமல் மேற்சொன்ன காரியங்களைச் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா?நிர்வாக விதிகள் என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பதுதான் ஒரே வழி. இதில் கூறப்பட்டுள்ள முக்கியமான விதிகள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் (உண்மையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?), உங்கள் குழு உறுப்பினர்களை நீங்கள் எப்படிக் கவர்ந்திழுக்க வேண்டும் (இதைத்தான் நீங்கள் செய்வதே இல்லையே!) என்பதைக் கற்றுத் தருகிறது. உங்கள் குணத்திலும் செயலிலும் அடிப்படையான பல மாற்றங்களை உருவாக்கி, உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. இந்த விதிகளைத் தெரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை இன்னும் எளிதாகிவிடும். நீங்கள் அடையும் வெற்றி இன்னும் பிரமாண்டமானதாக மாறிவிடும். இதன் பிறகு பதவி உயர்வு என்கிற ஏணியில் நீங்கள் உயர உயர ஏறிக் கொண்டிருப்பதை சர்வ சாதாரணமாக எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மற்றவர்களை விடுங்கள், நீங்களே நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவர்கள் வேண்டுமானாலும் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் மிகச் சிறந்தவராக இருந்தே ஆகவேண்டும். அதற்குத்தான் இந்தப் புத்தகம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: உளவியல் - 14.05.2009