செல்வம் சேர்க்கும் விதிகள்

Save 11%

Author:

Pages:

Year: 2009

Price:
Sale priceRs. 200.00 Regular priceRs. 225.00

Description

பணம் உலகத்தை நிற்காமல் சுழல வைக்கும் சக்தி கொண்டது. பணத்தினால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்மில் பலரும் உள்ளூற நம்பிக்கொண்டிருக்கிறோம். கவலை இல்லாமல் இருக்க வேண்டுமெனில், தேவையான அளவு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமல்லவா? நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க நமக்குப் பணம் நிச்சயம் தேவையல்லவா?பெரும் பணக்காரர்கள் இன்னும் அதிகமான பணத்தை எப்படிச் சேர்க்கிறார்கள்? அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்களா? அல்லது நாம் செய்யாத எதையாவது அவர்கள் செய்கிறார்களா?ஆம், பணத்தைக் குவிக்கும் விதிகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்; அதை ஒன்று விடாமல் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.யாரையும் பணக்காரர் ஆக்கும் இந்த விதிகளை உங்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் உங்களைப் பணக்காரராக ஆக்கப் போகிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர். சுவாரஸ்யமான மொழியில், எளிமையான உதாரணங்களோடு அவர் சொல்லி இருக்கும் பொன்னான விதிகளை நீங்களும் பின்பற்றி நடப்பீர்கள் எனில், நீங்கள் நிச்சயம் பணம் குவிக்க முடியும். உங்களிடம் இருக்கும் பணத்தை இன்னும் பல மடங்கு அதிகமாக்க முடியும்.செல்வம் சேர்க்கும் விதிகள் என்னும் இந்தப் புத்தகம், உங்கள் பணம் குவிப்பது தொடர்பான உங்கள் பழக்கவழக்கத்தை, சிந்தனைப் போக்கை, வாழ்க்கை முறையை ஆராய்ந்து உங்களுக்குச் சொல்லும். இன்னும் நிறைய பணம் சேர்த்து, செல்வச் செழிப்போடு, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:உளவியல் - 21.06.2009தினமணி - ஏப்ரல் 2009

You may also like

Recently viewed