Description
திறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும்இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக்கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர்ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம்.மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி ?பேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்படி?எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது ?பிரஸெண்டேஷன் தயாரிப்பது எப்படி?தம் பேச்சு மற்றவர்களை வசீகரிக்கிறதா என்பதை எப்படிக் தெரிந்துகொள்வது ?யாருக்காகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதை எப்படி முடிவுசெய்வது ?நிறந்த பேச்சாளராக மாறுவது எப்படி என்று 36 ஆண்டுகளாகநிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள், வல்லுனர்கள் என்று பலருக்கும்பயிற்சியளித்து வரும் ஜேம்ஸ் ஓரூர்க்கின் இந்தப் புத்தகம்உலகம் முழுவதிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.